சென்னை: டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து, கல்பாக்கம்அணுமின் நிலையத்துக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் சென்னை அணு மின் நிலையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், பாபா அணு ஆராய்ச்சி மையம், பாவினி 500 மெகாவாட் அணுமின் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகிறது. டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு ஏற்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய தொழில் பாதுகாப்பு படை, கடலோர காவல் படை, விமானப்படை, தமிழ்நாடு போலீசார் என 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, அணு மின் நிலைய வளாகம் முழுதும் தீவிர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அணு மின் நிலையத்தின் அனைத்து நுழைவு வாயில்கள் வழியாக வருகின்ற அணுமின் நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
+
Advertisement
