புதுடெல்லி: டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் கட்டப்பட்டுள்ள மத்திய செயலக கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். இதையடுத்து கடமைப்பாதையில் மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சியிலும் பிரதமர் உரையாற்ற உள்ளார். புதிய மத்திய செயலகத்துக்கு கர்த்தவ்ய பவன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய கட்டிடம் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. 1950-ம் ஆண்டு மற்றும் 1970-ம் ஆண்டுகளுக்கு இடையே கட்டப்பட்டுள்ள சாஸ்திரி பவன், கிரிஷிபவன், உத்யோக் பவன் மற்றும் நிர்மாண் பவன் போன்ற பழைய கட்டிடங்களில் இயங்கி வரும் பல்வேறு முக்கிய அமைச்சகங்களின் செயல்பாடுகள் அனைத்தும் புதிய கட்டிடத்திற்கு விரைவில் மாற்றப்பட உள்ளது.
+