டெல்லியில் எம்பிக்களுக்காக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள்: பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
புதுடெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு போதிய இடவசதி இல்லை என தொடர்ந்து உறுப்பினர்கள் வேதனை தெரிவித்து வந்த நிலையில், அவர்களுக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி டெல்லியின் பாபா கரக் சிங் மார்க்கில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளன. இங்கு மொத்தம் 174 வீடுகள் உள்ளது. ஒவ்வொரு வீடும் 5,000 சதுரஅடி பரப்பளவை கொண்டது.
இந்த குடியிருப்பில் அலுவலகங்கள், ஊழியர்கள் தங்குமிடம், சமூக மையம் ஆகியவற்றுக்கான பிரத்யேக இடங்களும் அமைந்துள்ளன. மேலும் இந்த வளாகத்துக்குள் உள்ள அனைத்து கட்டிடங்களும் நவீன கட்டிட வடிவமைப்பு விதிமுறைகளின்படி, பூகம்பத்தை தாங்கும் விதமாக கட்டப்பட்டுள்ளன. இந்த குடியிருப்பு வளாகத்தை பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு திறந்து வைக்கிறார். அப்போது சிந்தூர் மரக்கன்று ஒன்றையும் பிரதமர் நட்டு வைப்பார்.