டெல்லியில் இன்று மாலை நடக்க உள்ள பதவியேற்பு நிகழ்ச்சியில் மோடியுடன் 30 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல்
டெல்லி: டெல்லியில் இன்று மாலை நடக்க உள்ள பதவியேற்பு நிகழ்ச்சியில், பிரதமர் மோடியுடன் 30 பேர் அமைச்சர்களாக பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி கட்சிகளுடன் விரிவான ஆலோசனை நடத்திய பிறகு, அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்ட மூத்த தலைவர்களும் இன்று அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.