புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கில் காரை ஓட்டி வந்தவருக்கு அடைக்கலம் கொடுத்த அரியானாவை சேர்ந்த ஒருவரை என்ஐஏ கைது செய்துள்ளது. டெல்லி செங்கோட்டையில் கடந்த 10ம் தேதி கார் குண்டுவெடிப்பு தற்கொலை படை தாக்குதலில் 15 பேர் பலியாகினர். காரில் வெடிபொருட்களுடன் தாக்குதலை நடத்திய காஷ்மீரை சேர்ந்த டாக்டர் உமர் உடல் சிதறி இறந்தான். இதில் 15 பேர் பலியானார்கள். மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கை தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் காஷ்மீர் போலீசார், அரியானா அல் பலா பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியர் டாக்டர் முசம்மில் ஷகீல் கனாயி, அனந்த்நாக்கை சேர்ந்த டாக்டர் அதில் அகமது, லக்னோவை சேர்ந்த பெண் டாக்டர் ஷாஹீன் சயீத் மற்றும் மத பிரசாரகர் மவுலவி இர்பான் அகமது வாகே ஆகியோர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், உமருக்கு அடைக்கலம் கொடுத்ததாக பரிதாபாத்தை சேர்ந்த சோயப் என்பவனை என்ஐஏ கைது செய்துள்ளது. இந்த வழக்கில்இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
+
Advertisement


