டெல்லி குண்டு வெடிப்புக்கு கண்டனம் உள்துறை அமைச்சகம் விளக்கம் அளிக்க வேண்டும்: மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்
சென்னை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நேற்று வெளியிட்ட அறிக்கை: டெல்லி செங்கோட்டை பகுதியில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 12 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். விமான நிலையம், ரயில் நிலையங்கள் மற்றும் பெருநகர நுழை வாயில்கள் என எல்லா இடங்களிலும் பாதுகாப்பு சோதனைகள் நடந்து வரும் நிலையிலும் விபத்து எப்படி நடந்தது என்ற வினாவிற்கு உள்துறை அமைச்சகம் விளக்கம் அளிக்க வேண்டும். உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரண நிதி உள்ளிட்ட உதவிகள் வழங்க வேண்டும். குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
