Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலையில் உள்ளதால் மக்கள் அவதி

டெல்லி: தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலையில் உள்ளதால் மக்கள் அவதிகுள்ளாகி உள்ளனர். காற்றின் தரக் குறியீடு 355 என்ற மோசமான நிலையில் உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு (AQI) இன்று காலை 8 மணி நிலவரப்படி 355 ஆக இருந்ததால், அது 'மிகவும் மோசமான' பிரிவிலேயே நீடித்தது. இந்தத் தரவை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) வெளியிட்டுள்ளது.

காற்றுத் தர நிலவரம்:

இந்தியா கேட்: காற்றுத் தரக் குறியீடு 322

பாலம் பகுதி: காற்றுத் தரக் குறியீடு 320

தௌலா குவான்: காற்றுத் தரக் குறியீடு 269

"மாசுபாடு மிக அதிகமாக உள்ளது. எங்களால் சுவாசிக்கச் சிரமமாக உள்ளது. சம்பந்தப்பட்ட துறைகளால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தச் சிக்கலில் அரசு கவனம் செலுத்த வேண்டும்" என்று உள்ளூர்வாசிகள் கவலை தெரிவித்துவருகின்றனர்.

கடந்த நாட்களின் நிலை;

வெள்ளிக்கிழமை: டெல்லியின் ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு 312 ஆகப் பதிவாகி, 'மிகவும் மோசமான' பிரிவில் இருந்தது.

வியாழக்கிழமை: காற்றுத் தரக் குறியீடு 271 ஆகப் பதிவாகி, 'மோசம்' என வகைப்படுத்தப்பட்டது.

பல்வேறு பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு (காலை 8 மணி நிலவரம்);

ஆனந்த் விகார் (332), அலிப்பூர் (316), அசோக் விஹார் (332), பவானா (366), புராரி கிராசிங் (345), சாந்தினி சௌக் (354), ITO (337), ஜஹாங்கீர்புரி (342), முண்ட்கா (335), ஆர்.கே. புரம் (321) உள்ளிட்ட பல பகுதிகளில் காற்றுத் தரம் 'மிகவும் மோசமான' பிரிவில் பதிவாகியுள்ளது.