சென்னை: பரபரப்பான சூழ்நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி செல்கிறார். டெல்லியில் பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து செங்கோட்டையன் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் இருந்து காலை 8.50 மணிக்கு செங்கோட்டையன் டெல்லி புறப்படுகிறார். அதிமுக ஒன்றிணைய எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்திருந்தார். செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்திருந்த அடுத்த நாள் அதிமுக பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை எடப்பாடி நீக்கினார். செங்கோட்டையனுக்கு ஆதரவாக 3000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர். அதிமுக ஒன்றிணைய செங்கோட்டையனுக்கு ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
+
Advertisement