டெல்லி: 2020 டெல்லி வன்முறை வழக்கில் மாணவர் உமர் கலீத் உள்ளிட்ட 6 பேரின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அரவிந்த் குமார், அஞ்சாரியா அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக வெடித்த வன்முறையின் தொடர்ச்சியாக 2020 செப்டம்பரில் உமர் கலீத் போலீசார் கைது செய்தனர். டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிணை மறுக்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
+
Advertisement


