டெல்லி: எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் நிதிஅமைச்சர்கள் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். டெல்லியில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்துக்கு முன்பாக எதிர்கட்சிகள் ஆளும் மாநில நிதி அமைச்சர்கள் ஆலோசனை நடத்துகின்றனர். வரிவருவாய் இழப்பீட்டை ஈடுகட்ட போதிய நிதி ஒதுக்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்த முடிவு செய்துள்ளனர். கூட்டத்தில் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, கேரள நிதி அமைச்சர் பாலகோபால், கர்நாடக நிதி அமைச்சர் பங்கேற்றனர்.
+
Advertisement