டெல்லி: டெல்லியில் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்தார். நேற்று பிரதமரை சந்தித்த நிலையில், இன்று ஒன்றிய அமைச்சரை சந்தித்தார். தமிழ்நாட்டில் உயர்கல்வியை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான வழிகள் மற்றும் முறைகள் பற்றி விவாதித்ததாக ஆளுநர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Advertisement