டெல்லிக்கும் செல்லும்போதெல்லாம் எடப்பாடி பல கார்களில் மாறி மாறி மறைந்திருந்தே போகும் மர்மம் என்ன?: திமுக கேள்வி
சென்னை: டெல்லிக்கும் செல்லும்போதெல்லாம் எடப்பாடி பல கார்களில் மாறி மாறி மறைந்திருந்தே போகும் மர்மம் என்ன? என பழனிசாமியின் கள்ளக் கார் பயணங்களும், கேள்விகளும் என்ற தலைப்பில் திமுக கேள்வி எழுப்பியுள்ளது. அரசு வாகனத்தில் சென்றதாக கூறும் பழனிசாமி ரூ.8 கோடி 5 DL2CAN 9009 பதிவெண் கொண்ட கருப்பு Bentley காரில் வந்தது எப்படி?. அமித் ஷா இல்லத்தில் இருந்து வெளியே வந்த பழனிசாமியுடன் இருந்தது யார்?. அமித்ஷா இல்லத்திலிருந்து முகத்தை மறைத்து வெளியேறுவது ஏன்? என்ன அவசியம்? என்ன நிர்பந்தம்? எதை மறைக்கிறார்? யாரை மறைக்கிறார் என திமுக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.