டெல்லி கார் வெடிப்பு குறித்து உள்துறை அமைச்சரை தொடர்புகொண்டு கேட்டறிந்தார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!
டெல்லி : அரசுமுறைப் பயணமாக அங்கோலா சென்றுள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, டெல்லி கார் வெடிப்பு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொடர்புகொண்டு கேட்டறிந்தார். டெல்லி - செங்கோட்டைக்கு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் கார் தீப்பிடித்து வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர்.
