சென்னை: டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக காவல்துறை ஈடுபட்டுள்ளனர். எல்லைகளில் சோதனையை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டாலும் தீவிர கண்காணிப்புடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரயில்வே காவல் துறையினர், பாதுகாப்புப் படை அதிகாரிகள் இணைந்து தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்துக்கு அருகிலுள்ள, சிசிடிவி பதிவுகளை சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து மும்பையில், முக்கிய இடங்களில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
+
Advertisement

