டெல்லி: கார் வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக நாளை பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம் கூட இருப்பதாக தகவல் கிடைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை நடைபெற்ற டெல்லி கார் வெடிப்பு சம்பவமானது தீவிரம் அடைந்திருக்கிறது. அமித்ஷா மத்திய உள்துறை தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் குழுக்கூட்டம் நடைபெற்றது. உளவுத்துறை டிஜி, டெல்லி காவல் துறை இயக்குநர், ஜம்மு காஷ்மீர் காவல் துறை இயக்குநர் என பல்வேறு உயர் அதிகாரிகள் பங்கேற்றார்கள்.
இந்த கூட்டம் நிறைவடைந்துள்ள நிலையில், முதல் கட்ட அறிக்கை அமித்ஷா விடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாளை மாலை 5.30 மணிக்கு மத்திய அமைச்சர் அவையின் பாதுகாப்பு கூட்டமானது நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த கூட்டத்தில் பிரச்சனைக்கு கரணம் என்ன? அதாவது டெல்லி குண்டு வெடிப்பு பாதுகாப்பு குறைபாடா அல்லது உளவுத்துறை தகவலில் ஏதேனும் பிழையிருக்கிறதா..?
அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து பல்வேறு விஷியங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே ஆப்ரேஷன் சிந்தூர் நடத்தப்பட்ட நேரத்தில் அமைச்சரவையில் அவசர பாதுகாப்பு குழு கூட்டமானது கூட்டப்பட்டது. அந்த தாக்குதலுக்கு எப்படி பதிலடிகொடுக்க வேண்டும். என்ன நடந்தது என்று குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதேபோல ஒரு சூழல் தான் ஏற்பட்டு இருக்கிறது. அது தொடர்பாக ஆலோசனை நடத்த நாளை இந்த குழுவானது கூட இருக்கிறது.
இந்த குழு கூட்டம் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பாரா என்று கேள்வி எழுந்திருக்கிறது. ஏனெனில் பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக பூட்டன் சென்றிருக்கிறார். இருப்பினும் அமித்ஷா இந்த கூட்டத்தில் பங்கேற்பர். இன்று அவரிடம் பகிரப்பட்ட அனைத்து தகவல்களையும் நாளை அமைச்சரவை கூட்டத்தில் அவர் முன்வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
