டெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் 4 பேரை என்.ஐ.ஏ கைது செய்தது. டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதானவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே நவம்பர் 10ல் நடந்த கார் குண்டு வெடிப்பில் 14 பேர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மூவர், உ.பி.யைச் சேர்ந்த ஒருவர் என நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
+
Advertisement


