டெல்லியில் கார் குண்டுவெடிப்புக்கு டெட்டனேட்டர், அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டது விசாரணையில் உறுதி!!
டெல்லி : டெல்லியில் கார் குண்டுவெடிப்புக்கு டெட்டனேட்டர், அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டது விசாரணையில் உறுதியாகி உள்ளது. ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் நேற்று 3,000 கிலோ வெடிபொருட்கள் சிக்கியதற்கும் குண்டுவெடிப்புக்கும் தொடர்பா? என சந்தேகம் எழுந்துள்ளது. எரிபொருளாக பயன்படுத்தும் எண்ணெயை பயன்படுத்தியும் வெடிபொருள் செய்யப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
