டெல்லி: டெல்லியில் ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, பாஜக அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோர் உடன் இருந்துள்ளனர். டெல்லியில் உள்ள அமித் ஷா இல்லத்தில் நடந்த சந்திப்பில் அரசியல் விவகாரங்கள் குறித்து ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் ஓ.பன்னீர்செல்வம் அமித் ஷாவை சந்தித்த நிலையில் தற்போது அண்ணாமலையும் சந்திப்பு நடந்துள்ளது.
+
Advertisement

