சென்னை: ஆவடி கண்ணப்பாளையம், காடுவெட்டி தடுப்பணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரால் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கண்ணப்பாளையம் தடுப்பணையில் இருந்து 1,200 கன அடியும், காடுவெட்டி தடுப்பணையில் இருந்து 1,600 கன அடியும் நீர் திறக்கப்பட்டு வருகிறது. மோன்தா புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வருகிறது. கூவம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து இருபுறங்களிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
+
Advertisement
