டொரன்டோ: கனடாவின் டொரன்டோ நகரில் கனடா மகளிர் ஓபன் ஸ்குவாஷ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை அனாஹத் சிங், நடப்பு சாம்பியனான, பெல்ஜியம் வீராங்கனை டினெ கிலிஸ் உடன் மோதினார்.
உலகின் 7ம் நிலை வீராங்கனையான கிலிசை சாமர்த்தியமாக எதிர்கொண்ட அனாஹத், 12-10, 11-9, 11-9 என்ற நேர் செட் கணக்கில் அபாரமாக வென்றார். இந்த போட்டி 36 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, அனாஹத் சிங் அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். உலகளவில் 43ம் நிலை வீராங்கனையான அனாஹத், டாப் 10க்குள் உள்ள ஒருவரை வீழ்த்தியது, அவரது வாழ்நாள் சாதனையாக கருதப்படுகிறது.
