புதுடெல்லி: டீப்பேக் மோசடிகளை ஒழுங்குபடுத்துவதற்கான தெளிவான சட்ட கட்டமைப்பை உருவாக்கக் கோரும் தனிநபர் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இந்த மசோதாவை சிவசேனா எம்பி ஸ்ரீகாந்த் ஷிண்டே தாக்கல் செய்தார். டீப்பேக் கன்டென்ட்களில் சித்தரிக்கப்படும் நபர்களிடம் இருந்து முன் ஒப்புதல் பெறுவதை கட்டாயமாக்குவதன் மூலம் மக்களை பாதுகாக்க முடியும் என மசோதாவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தீங்கிழைக்கும் நோக்கத்துடன் டீப்பேக் கன்டென்ட்களை உருவாக்கும் அல்லது பரப்பும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில் வலுவான சட்ட கட்டமைப்பையும் இந்த மசோதா பரிந்துரைத்துள்ளது.
+
Advertisement


