டிசம்பர் 17ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்: பாமக நிறுவனர் ராமதாஸ்
சென்னை: வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று வலியுறுத்தி டிசம்பர் 17ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். குறைந்தது 5 லட்சம் பேராவது இந்தப் போராட்டத்தில் பங்கேற்று சிறை செல்லத் தயாராக இருக்க வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.