சென்னை: கழுகுகள் இறப்புக்கு காரணமான குறிப்பிட்ட சில மருந்துகளை ஒரு முறைக்கு மேல் கால்நடைகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. வழக்கறிஞர் சூர்யகுமார் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. வழக்கு தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. NIMUSLIDE, FLUNIXIN, CARPROFEN மருந்துகள் செலுத்தப்பட்டு இறக்கும் கால்நடைகளை கழுகுகள் உண்ணும். எனவே கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இந்த மருந்துகளை தயாரிக்கவும் விற்கவும் தடை கோரி வழக்கு தொடரப்பட்டது.
Advertisement