ஐதராபாத்: ஐதராபாத்தில் கிருஷ்ணாஷ்டமி கொண்டாட்டத்தில் கிருஷ்ணர் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹைதராபாத்தின் உப்பல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமந்தபூரில் ஸ்ரீ கிருஷ்ண சோபா யாத்திரை வருடம்தோறும் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடம் சுமார் பத்து பேர் கிருஷ்ணர் தேரைத் தள்ளிக்கொண்டு முன்னோக்கி நகர்ந்தனர். அப்போது சிலை ஒரு பகுதி மின் கம்பிகளில் மோதியது.
இதனால் உடனடியாக மின்னோட்டம் ஏற்பட்டது. இதில், கிருஷ்ணா(21), சுரேஷ் (34), ஸ்ரீகாந்த்(35), ருத்ரவிகாஸ் (39), ராஜேந்திரரெட்டிரு45) ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்த 4 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில். இறந்த ஐந்து பேரின் உடல்களும் மருத்துவமனையில் இருந்து காந்தி பிணவறைக்கு மாற்றப்பட்டனர். மேல்நிலை கம்பிகள் கட்டமைப்பில் உராய்ந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.