Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

டி ஏஜிங் சிகிச்சை எடுத்த நடிகை காஜல் அகர்வால்

சென்னை: தென்னிந்திய ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு கவுதம் கிச்சலு என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மகன் இருக்கிறார். திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார் காஜல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், காஜல் அகர்வால் கையில், மூக்கில் ட்ரிப்ஸ் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும், உடல்நலம் சரியில்லையா என ஷாக்காகிவிட்டனர். ஆனால், அந்த ட்ரிப்ஸ் அவர் அழகை கூட்ட, உடலில் எனர்ஜி கூட, தோல் இன்னும் பளபளப்பாக மாறத்தான் எடுத்துக்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரியா நாட்டில் இப்படி டி ஏஜிங் சிகிச்சையை பல பிரபலங்கள் செய்வது வழக்கம் என கூறப்படுகிறது. அந்த புகைப்படத்தை பார்த்துதான் ரசிகர்கள் ஷாக்காகிவிட்டனர். பிறகு சிலர் டி ஏஜிங் சிகிச்சைதான் காஜல் பெறுகிறார் என விளக்கம் தந்ததும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.