டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் டெஃப்லிம்பிக்ஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் தனுஷ் ஸ்ரீகாந்த் (23), சிறப்பாக செயல்பட்டு, 252.2 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தார். அதனால், தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
இதற்கு முன், கடந்த 2022ல், பிரேசிலின் கேக்சியாஸ் டோ சுல் நகரில் நடந்த டெஃப்லிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்றுள்ள தனுஷ், 2 தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார். நேற்றைய 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு போட்டியில் மற்றொரு இந்திய வீரர் முகம்மது முர்தாஸா, 250.1 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார். தென் கொரியாவின் பேக் சியுங்காக், 223.6 புள்ளிகளுடன் வெண்கலம் பெற்றார்.


