Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முன்னேற்றத்துக்கான பயணத்தை சாத்தியமாக்கியது விடியல் பயணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை: முன்னேற்றத்துக்கான பயணத்தை சாத்தியமாக்கியது விடியல் பயணம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்கள் நலனுக்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மேலும், சமூக, பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் சிறப்பான பங்களிப்பை உயர்த்தும் முயற்சியில், அரசு போக்குவரத்துக்கழக சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள ‘விடியல் பயணம் திட்டம்’ தொடங்கப்பட்டது. மேலும் விடியல் பயணம் திட்டம் மூலம் ஏழ்மை நிலையிலுள்ள பெண்கள் வேலை, மருத்துவமனைகள் மற்றும் சமூக நோக்கங்களுக்காக பயணிப்பதற்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

இந்த திட்டம் செயல்படுத்தி வருவதால் பெண்கள் சுயதொழில் தொடங்க அதிக வாய்ப்புகள் உருவாக்கியுள்ளதுடன், தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் தற்போது அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் மூலம் பெண்கள் பயணத் தேவைகளுக்கு குடும்ப உறுப்பினர்களைச் சார்ந்து இருக்காமல் அவர்களின் தன்மேம்பாடு மற்றும் கௌரவத்திற்கு வழி வகுக்கிறது. குறைந்த வருமானம் கொண்ட பெண்கள் அதிக அளவில் பயனடைவதோடு, இத்திட்டத்தினால் ஏற்பட்ட சேமிப்பின் மூலம் அவர்கள் சில்லறை பணவீக்கத்தின் தாக்கத்தினை எதிர்கொள்ளவும் உதவுகிறது. நகர்ப்புறங்களிலுள்ள புதிய கற்றல் திறன் வாய்ப்புகளை அணுகவும், குறைந்த செலவில் நகர்ப்புற இடங்களுக்கு சென்று வரவும், அவர்களின் சமூக நல்வாழ்வை மேம்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின்; வீட்டவிட்டு வெளிய போயிட்டு வரணும்னாலே 50 ரூபாய் தேவை. நான் வீட்டுலயே இருந்துக்குறேன்” என்ற எண்ணத்தை - பொருளாதாரத் தடையைத் தகர்த்து, கல்விக்கான - வேலைவாய்ப்புக்கான - முன்னேற்றத்துக்கான பயணத்தைச் சாத்தியமாக்கியது விடியல் பயணம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நமது திராவிட மாடலின் 51 மாதங்களுக்குள் விடியல் பயணத்தின் மூலம் நமது சகோதரிகள் 50 ஆயிரம் ரூபாய் வரை சேமித்துள்ளதும் - அந்தத் திட்டத்துக்கு அரசு செலவழிப்பதும், மகளிர் முன்னேற்றத்துக்கான முதலீடு என்றும் குறிப்பிட்டுள்ளார்.