சென்னை: காவல் உதவி செயலி அறிமுகம் செய்யப்பட்டு 6 ஆண்டுகளான போதிலும் சுமார் 13.35 லட்சத்திற்கு மேற்பட்டோர் அதனை பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள். அவர்களில் 8.30 லட்சம் பேரே பயன்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆபத்தான நேரங்களில் பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு உடனடியாக போலீசாருக்கு உதவி கிடைக்க தமிழாக காவல் துறை, காவலன் எஸ்.ஓ.எஸ் என்ற மொபைல் போன் செயலியை அறிமுகம் செய்தது. பின் இச்செயலில் காவல் உதவி என பெயர் மாற்றப்பட்டது.
பாதுகாப்பு முக்கியம் துவம் வாய்ந்த காவல் உதவி செயலி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் என விழுப்புணர்வு செய்த போதிலும், சமூக வலைத்தளங்களுக்கு தரும் முக்கிய துவத்தை இச்செயலிக்கு தர ஆர்வம் காட்டாமல் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆபத்து நேரத்தில் காவல் உதவி செயலி பதிவிறக்கம் செய்யப்பட்ட ஸ்மார்ட் போனை வலது, இடது என 3 முறை ஷாக் செய்தலே போதும். ஜி.பி.எஸ் கருவி ஆன் ஆகி சென்னையில் உள்ள அதிநவீன காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு சென்று விடும்.
காவல் உதவி செயலி ஆபத்தில் இருக்கும் நபர் எத்தகைய சுழலில் உள்ளார் என்பதை 15 வினாடிகளில் வீடியோ எடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி விடும். இணைய வசதி, மொபைல், போன் டவர் கிடைக்காத இடமாக இருந்தாலும் அந்த இடத்தில் இருந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு குறுஞ்செய்தி வந்து விடும். மேலும் ஆபத்தில் இருக்கும் நபர் குறித்து அவரின் நலன் விரும்பிகள் 3 பேருக்கு தகவலும் சென்று விடும். காவல் உதவி செயலி வாயிலாக அழைப்போ, குறுஞ்செய்தியோ கிடைத்த அடுத்த வினாடியே போலீசார் செயல்பட தொடங்கிவிடுவர்.
ஆபத்தில் இருக்கும் நபர் பகுதிக்கு அருகே உள்ள போலீசார் அனுப்பி வைக்கப்படுவர். இப்பணிகள் எல்லாம் போலீசார், அதிகாரிகள் கண்காணிப்பர். ஆபத்துக் காலத்தில் உதவும் இந்த காவல் உதவி செயலி பெண்கள், ஆண்கள் என எல்லாரிடமும் இருக்க வேண்டியது கட்டாயம் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஸ்மார்ட் போன் வசதி இல்லாத நபர்கள் 100, 112, 101 என்ற எங்களுக்கு அழைத்தால் போதும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

