சேவூரில் இருந்து ரகுநாதபுரம் செல்லும் ஏரிக்கரை சாலையில் பழுதடைந்துள்ள மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும்
*ஆரணி ஆர்டிஓ அலுவலகத்தில் மனு
ஆரணி : ஆரணி வருவாய் கோட்டாசியர் அலுவலகத்தில் வாரந்திர மக்கள் குறைத்தீர்வு கூட்டம் ஆர்டிஓ நேர்முக உதவியாரள் மனோகரன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், வருவாய் மற்றும் பிறதுறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, நேர்முக உதவியாளர் மனோகரன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்தினர். அப்போது, ஆரணி அடுத்த ராகுநாதபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
நாங்கள் 1200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். மேலும், சேவூரில் இருந்து ரகுநாதபுரம் செல்லும் ஏரிக்கரை சாலையில் இருந்து பொருமாள் கோயில் வரை கடந்த சில வாரங்களாக மின் விளக்குகள் பழுதடைந்து, எரியாமல் இருந்து வருகிறது.
இதனால், பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்லும் பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள் இரவு நேரத்தில் வீட்டிற்கு வரும்போது, போதிய வெளிச்சம் இல்லாததால், கிராம மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ரகுநாதபுரம் கிராமத்தில் பழுதடைந்துள்ள மின்விளக்குகளை அகற்றி புதிய மின் விளக்குகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்திருந்தனர்.
தொடர்ந்து, கூட்டத்தில் பட்டா, நிலத்தகராறு உள்ளிட்டவை தொடர்பாக 66 கோரிக்கை மனுக்களை நேர்முக உதவியாளர் மனோகரன் பெற்று சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இதில், வருவாய் மற்றும் பிற துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
