டெல்லி: பிரபல நடிகர் மோகன்லாலுக்கு 2023ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 23ம் தேதி நடைபெறும் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது. நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட மோகன்லால், திரைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மோகன்லாலின் திரைப்பயணம் பல தலைமுறையினருக்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது. மோகன்லாலின் ஈடு இணையற்ற திறமை, பன்முகத்திறமை, கடின உழைப்பு இந்திய திரைப்பட வரலாற்றின் தரத்தை உயர்த்தி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் முன்னணி நடிகரான மோகன்லால் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். 1978ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடிகர் மோகன்லால் நடித்து வருகிறார்.