சென்னை: தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் டிட்வா புயல் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. முன்னதாக மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்ந்த டிட்வா புயலின் வேகம் 7 கி.மீ.ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு 490 கி.மீ தூரத்தில் தெற்கு திசையில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து 380 கி.மீ. தொலைவில் தெற்கு தென் கிழக்கில் புயல் மையம் கொண்டுள்ளது. காரைக்காலில் இருந்து 270 கி.மீ. தொலைவில் தெற்கு தென்கிழக்கிலும் புயல் மையம் கொண்டுள்ளது
+
Advertisement

