சென்னை: இந்நிலையில் மோன்தா புயல் எதிரொலியாக ஆந்திராவில் இன்றும் நாளையும் 67 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள 'மோன்தா' புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்றது. மசூலிப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 190 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ள மோன்தா புயல் 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திராவின் மசூலிப்பட்டினம், கலிங்கப்பட்டினம் இடையே இன்றிரவு தீவிரப் புயலாக கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஆந்திராவின் காக்கிநாடா அருகே மச்சிலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே மாலை அல்லது இரவு மோன்தா புயல் கரையை கடக்க உள்ளது. புயல் கரையை நோக்கி நகர்ந்து வரும்போது மழையின் தீவிரம் அதிகம் இருக்கும். இதனால் ஆந்திரா, புதுச்சேரி, ஒடிசா ஆகிய மாநிலங்களில் அதி கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மோன்தா புயல் எதிரொலியாக ஆந்திராவில் இன்றும் நாளையும் 67 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
* சென்ட்ரல் - ஹவுரா, சென்ட்ரல்-விசாகப்பட்டினம், விழுப்புரம்-காரக்பூர், திருச்சி-ஹவுரா உள்ளிட்ட 11 ரயில்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
* ஆந்திராவின் காக்கி நாடா அருகே மோன்தா புயல் கரையை கடக்க உள்ள நிலையில் 2 நாட்களுக்கு 67 ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
* மழை காரணமாக சென்னை சென்ட்ரல் - விசாகப்பட்டினம் சூப்பர் பாஸ்ட் ரயில், புவனேஸ்வர் – புதுச்சேரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், புதுச்சேரி – புவனேஸ்வர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் இன்று முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
* பெங்களூரு – நியூ தின்சுகியா ஜங்ஷன், பெங்களூரு – ஹாதியா, பெங்களூரு – அகர்தலா, பெங்களூரு - ஹவுரா ஜங்ஷன், பெங்களூரு – ஹவுரா ஜங்ஷன், பெங்களூரு – மால்டா டவுன், வாஸ்கோடகாமா – ஷாலிமர் ரயில்கள் 12 மணி நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
* பெங்களூரு – ஹாடியா எக்ஸ்பிரஸ் ரெயில் விஜயவாடா, வாராங்கல், சந்த் போர்ட், பிலாச்பூர், ஜர்சுகுடா ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.
