Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மோன்தா புயல் காரணமாக ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை வரும் 4 விமானங்கள் இன்று ரத்து

சென்னை: மோன்தா புயல் காரணமாக ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை வரும் 4 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டது. விஜயவாடா, விசாகப்பட்டினம், ராஜமுந்திரி ஆகிய விமான நிலையங்களில் இருந்து சென்னைக்கு வரும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் இருந்து காலை 9.45 மணிக்கு சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ரத்து; புயல் காரணமாக மேலும் சில விமானங்களும் ரத்து செய்யப்பட வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டது. சென்னையில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு செல்லும் சில விமானங்களும் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.