அமராவதி: ஆந்திரா மாநிலம் நெல்லூரில் உள்ள சங்கம் தடுப்பணையில் மோத இருந்த ராட்சத இரும்பு படகுகளை துரிதமாக செயல்பட்டு பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டெடுத்தனர். ஆந்திராவில் நெல்லூரில் இருக்கக்கூடிய ஆற்றில் தலா 35 டன் எடையுள்ள 3 ராட்சத படகுகள் மோத இருந்த நிலையில், அதை மீட்பு படையினர் நிறுத்தி அந்த படகுகளை மீட்கக்கூடிய முயற்சியில் ஈடுபட்டனர். அணையில் மதகுகள் இடிந்ததால் சேதம் ஏற்பட்டுள்ளது. பத்திரிதமாக செயல்பட்டு தடுத்த பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்து அந்த படகுகள் மீட்கக்கூடிய முயற்சியில் ஈடுபட்டு இருந்தனர்.
மோன்தா புயல் காரணமாக ஆந்திரா மாநில நெல்லூரில் மாவட்டத்தில் அதிகமாக கனமழை பெய்தது. இதன் காரணமாக இந்த பகுதியில் உள்ள சங்கம் பென்னா நதியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து கொண்ட நிலையில், இங்கு மணல் சேகரிப்பதுக்காக பயன்படுத்தப்பட்ட மூன்று படகுகள் அடித்து செல்லப்பட்டு சங்கம் அணையை நோக்கி சென்றது. இதனை பார்த்த அதிகாரிகள் உடனடியாக நேற்று இரவு இரண்டு படகுகளை தேசிய பேரிடர் மீட்பு அதிகாரிகள் மீட்டனர்.
ஒரு படகு மற்றும் அந்த பகுதியில் உள்ள தடுப்பணை இடதுபுற உள்ள 400மீட்டர் மேல்நோக்கி இருந்தது. இதனை எவ்வாறு எடுப்பது என்று பெரும் சவாலாக அமைந்த நிலையில், 35 டன் எடைகொண்ட இந்த படகு நேரடியாக சங்கம் அணையில் அடித்து செல்லப்பட்டு மதகுகள் இடித்து இருந்தால் பேரிடர் ஏற்பட்டு இருக்கும். சங்கம் அணையில் உள்ள தண்ணீர் அனைத்தும் வெளியேறினால் பல கிராமங்கள் பாதிக்கப்பட்டு இருக்கும். இந்த நிலையில், உடனடியாக மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் தேசிய பேரிடர் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு மூன்று படகையும் பெரும் சிரமத்திற்கு மத்தியில் வெளியேற்றி கொண்டு வந்தனர். இதனால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.
