டெல்லி: ஜாகுவார் கார் நிறுவனத்தில் சைபர் தாக்குதல் காரணமாக உற்பத்தி முடக்கம் செய்யப்பட்டுள்ளது. டாடா மோட்டார்சின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் நிறுவனத்தில் சைபர் தாக்குதல் நடைபெற்றது. ரேஞ்ச் ரோவர், டிஸ்கவரி, டிஃபெண்டர் உள்ளிட்ட கார் தயாரிப்பு மற்றும் விற்பனையும் முடங்கியுள்ளது. நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பம் கடுமையாக பாதிக்கப்பட்டு கார் உற்பத்தி 4வது வாரமாக முடங்கியது. நிறுவன தொழில்நுட்பத்தை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
+
Advertisement