சென்னை: கடந்த ஜனவரி 6ம் தேதி தொடங்கிய நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடித்துவைக்கப்பட்டது என்று ஆளுநர் ரவி அறிவித்துள்ளார். நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடரை முடித்துவைத்து ஆளுநர் ரவி அறிவித்துள்ளார். 2026க்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரியில் ஆளுநர் உரையுடன் தொடங்குவது பற்றி முறைப்படி அறிவிப்பு வெளியாகும்.
2025-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்கள் பல கட்டங்களாக நடந்து முடிந்துவிட்டன; ஜனவரி மாதத்தில் முதல் கூட்டத்தொடர் தொடங்கி, ஆளுநர் உரையுடன் தொடங்கியதும், அதன்பின்னர் மார்ச் மாதத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர், அக்டோபர் மாதத்திலும் முக்கிய கூட்டத்தொடர்கள் என பல கூட்டத்தொடர்கள் நடந்து முடிந்துவிட்டன
சட்டமன்ற விதிப்படி, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூட்டம் நடைபெற வேண்டும் என்பதால், இந்த அக்டோபர் கூட்டத்தொடர் முடிந்துவிட்டது. 2025-ஆம் ஆண்டு முடிவடைந்ததால், அடுத்த கூட்டத்தொடர் பற்றிய அறிவிப்புகள் முறைப்படி ஜனவரி மாதம் வெளியாகும்.


