கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் எம் ஆர் கே பன்னீர்செல்வம்
கடலூர்: முதுநகர் சிப்காட் தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அருகில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாமன்ற உறுப்பினர் பிரகாஷ் ஆகியோர் இருந்தனர்.