Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடலூரில் வீட்டில் இருந்த தண்ணீர் வாளிக்குள் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு..!!

கடலூர்: கடலூரில் வீட்டில் இருந்த தண்ணீர் வாளிக்குள் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. கடலூர் கே.என்.பேட்டையை பகுதியை சேர்ந்தவர் சிவசங்கரன் இவரது மனைவி ஞானசவுந்தரி இவருக்கு கடந்த 2023ம் ஆண்டு இரட்டை பெண் குழந்தை பிறந்தது. இரு குழந்தைகளையும் தாய், தந்தையினர் வளர்த்து வந்த நிலையில் இன்று காலை தந்தை சிவசங்கரன் இளைய குழந்தையோடு விளையாடி கொண்டிருந்த போது மூத்த குழந்தை குனஸ்ரீ வீட்டில் இருந்த தண்ணீர் வாளியில் விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது மூத்த குழந்தை குனஸ்ரீ அருகில் இருந்த தண்ணீர் வாளியில் தவறி விழுந்துள்ளார்.

வீட்டில் இருந்தவர்கள் குழந்தையை காணவில்லை என்று தேடியுள்ளனர். அப்போது குழந்தை தண்ணீர் வாளியில் மூச்சு திணறி உயிரிழந்திருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்திருந்த நிலையில் குழந்தையை மீட்டு பெற்றோர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் குழந்தையின் தாய், தந்தை, உறவினர்கள் கதறி அழுதனர். தண்ணீர் வாளியில் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.