Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.!!

கடலூர்: கடலூர் அருகே காராமணி குப்பத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. வழக்கில் திடீர் திருப்பமாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பக்கத்து வீட்டின் சுவர் மற்றும் கழிவறையில் ரத்த கறைகள் படிந்துள்ள நிலையில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். கழிவறையில் உள்ள ரத்த மாதிரிகளையும் இறந்தவர்களின் வீட்டில் இருந்த ரத்த மாதிரிகளும் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.