கடலூர்: கடலூரில் பெய்த கனமழையால் கெடிலம் ஆற்றில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நேற்று கடலூரில் கனமழை பெய்தது. இந்த கனமழையானது கிட்டத்தட்ட 17 சென்டிமீட்டர் அளவுக்கு பெய்ததால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் மேம்பால கட்டும் பணி முற்றிலுமாக முடங்கியுள்ளது.
கடலூரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, கெடிலம் ஆற்றில் சென்று கொண்டிருக்கிறது. மேம்பால கட்டுவதற்காக பயன்படுத்தப்படும் தளவாடப் பொருட்கள் அனைத்துமே நீரில் மூழ்கியுள்ளன. தளவாடப் பொருட்களை மீட்கும் பணியை ஊழியர்கள் துரிதமாக செய்து வருகின்றனர்.
கெடிலம் ஆற்றில் மேம்பால பணி ஏற்கனவே மந்தமாக நடந்து வந்த நிலையில், மழையால் மேலும் பாலம் கட்டும் பணி முடங்கியுள்ளது. இதனால் பாலத்தை விரைவாக கட்டி முடிக்க முடியுமா என்பது கேள்வி குறியாகியுள்ளது. கடலூரில் தாழ்வான இடங்களில் தண்ணீர் அனைத்தும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியேற்றப்பட்டு வருகிறது.