கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 28 வாரம் குறைமாதத்தில் பிறந்த இரட்டை பச்சிளங்குழந்தைகள் 80 நாட்கள் சிகிச்சை பின் நலம்: பெற்றோர்கள் நெகிழ்ச்சி
கடலூர் : கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பச்சிளங்குழந்தை பிரிவு ஆனது 2018 ஆம் ஆண்டு முதல் பல்வேறு பச்சிளங்குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. கடலூர் இணைஇயக்குனர் டாக்டர்.மணிமேகலை , மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.நடராஜன் ,நிலைய மருத்துவ அதிகாரி. டாக்டர். கவிதா துறை த்தலைவர் அவர்கள், டாக்டர்.செந்தில்குமார் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் இங்கு 30 படுகைகள் கொண்டு அவசர சிகிச்சை பிரிவு இயங்கி வருகிறது
இந்நிலையில் கடலூர் அருகே நல்லவாடு பகுதியை சேர்ந்த மீனவர் குப்புராஜ் மற்றும் தமிழரசி தம்பதிக்கு தம்பதிக்கு குழந்தைபேறு உண்டாகியது . எழு மாத கர்ப்பிணியான தமிழரசி எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து பனிக்குடம் உடைந்து பிரசவ வலி ஏற்பட்டது. மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இரட்டை குழந்தைகள் ஒரு கிலோ மற்றும் 1.1 கிலோ எடையுடன் பிறந்தது. 28 வாரம் குறைமாதத்தில் பிறந்த இரட்டையர்களை குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர்.செந்தில்குமார் மேற்பார்வையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. மேலும் குழந்தைகளுக்கு மூச்சுதிணறல் தொந்தரவு இருந்ததால் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.
எடை குறைவான குழந்தைக்கு உடல் வெப்பம் குறைதல், சர்க்கரை அளவு குறைதல் போன்ற சிக்கல்களுக்கு செவிலியர்களும்,மருத்துவர்களும் சிறந்த முறையில் சிகிச்சை அளித்தனர். குழந்தைக்கு நோய் தடுப்பு மருந்துகள் நுண்ணுயிர் கொல்லிகள் மற்றும் தாய்ப்பால் ஆகியவற்றை அளித்து தொடர் கண்காணிப்பு மேற்கொண்டனர். 80 நாட்கள் சென்ற நிலையில் குழந்தையின் உடல்நிலை முன்னேற்றம் கண்ட நிலையில் குழந்தையை அவசர சிகிச்சை பிரிவிலிருந்து வார்டுக்கு மாற்றினர் குழந்தை சுத்தமான தாய்ப்பால், கங்காரு மதர் கேர், இதர சத்து மருந்துகள் கொடுத்து தொடர்ந்து குழந்தையின் எடையை ஏற்றி மேலும் குழந்தைக்கு இரத்தம், விழித்திரை கண்காணிப்பு, காது கேட்கும் திறன், எலும்புகள் வளர்ச்சி, தடுப்பூசி, மூளை வளர்ச்சி ஆகியவற்றை சீரிய இடைவெளியில் பரிசோதித்து நன்முறையில் பேணி காத்தனர் .
இரட்டைக் குழந்தைகள் 80 நாட்கள் முடிந்த நிலையில் நல்ல உடல் எடையும் (2 kg) மூலை வளர்ச்சியும் வேறு எந்த குறைபாடும் இல்லாததால் டீஸ்சார்ஜ் செய்ய திட்டமிட்டனர். வீடு திரும்பிய தாய் மற்றும் சேய்க்கு மருத்துவர்கள் , செவிலியர்கள் ,தூய்மைப் பணியாளர் ஆகியோர் பாராட்டி குழந்தையை பேணிகாக்க அறிவுரை வழங்கினர்.
கடலூர் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப்ரிவில் பல்வேறு வகைகளில் சிகிச்சை முறைகள் தமிழக அரசின் வழிகாட்டுதலின் பேரில் சிறந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அபூர்வ வகைகளில் ஒன்றாக இரட்டைக் குழந்தைகள் என்பது நாட்களுக்கு பராமரிக்கப்பட்டு நலமுடன் வீடு திரும்பியது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்டவர்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது.