கடலூர்: ஆவணி மாதம் வளர்பிறையில் கடைசி முகூர்த்தம் என்பதால் கடலூர் திருவந்திபுரம் கோயிலில் புதுமண ஜோடிகள் அலைமோதினர். கடலூர், திருவந்திபுரம் தேவநாதசுவாமி திருக்கோயிலில் இன்று ஆவணி மாதம் இறுதி முகூர்த்தம் நாள் இன்று சுமார் 130-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றனர். கடலூர் அடுத்து திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில் 108 வைணவ தலங்களில் முதுமை பெற்றதாகவும், மேலும் பிரதானம் செய்துகொண்டவர்கள் இதற்காக இன்று திருமணம் செய்துகொண்டால் தேவநாதசுவாமி தரிசித்து சென்று வருகின்றனர்.
திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில் முன்புள்ள மலையில் முகூர்த்த நாட்கள் அதிகளவில் திருமணம் நடைபெற்று வருவதால் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. மேலும் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருவந்திபுரத்தில் புதிதாக திருமண மண்டபம் கட்டும் பணி நடைபெற்றுவருவதால் இன்று முகூர்த்தம் என்பது நடைபெற்றது. மேலும் ஆவணி மாதத்தில் இன்று வளர்பிறை இறுதி முகூர்த்தம் நாளாகவும், இதுநாள் பல்வேறு இடங்களில் இருந்து இன்று திருமணம் நிகழ்ச்சி நடைபெற்றன. கடலூர் மட்டும் இல்லாமல் கடலூர், விழுப்புரம், புதுச்சேரியில் இருந்தும் திருவந்திபுரத்தில் திருமணங்கள் நடைபெற்றது.
இந்த கோயில் இரவு முதலிலேயே திருமணத்திற்கான இடங்களை பிடித்து ஒரே இடத்தில 130-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்று வருவதால் 1000க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். திருவந்திபுரத்தில் திருமணம் செய்வது ஐதீகப்படி நல்லது என்பதல், ஏராளமானோர் இன்று முகூர்த்தம் நாளில் திருமணம் செய்வது இங்கு குறிப்பிடத்தக்கது.