கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரிடம் நலம் விசாரித்தேன்; பாதிக்கப்பட்டோரை கண்டு கண் கலங்கி நின்றேன்: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேதனை!!
கரூர்: கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்தது போன்ற சம்பவம் இனி எங்குமே நடக்கக் கூடாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கரூரில் பேட்டியளித்துள்ளார். கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரிடம் நலம் விசாரித்தேன். என்னையும், அமைச்சர் எல்.முருகனையும் இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற பிரதமர் மோடி அனுப்பி வைத்தார். பாதிக்கப்பட்டோர் பேசுவதை கேட்டவுடன் கலங்கி நின்றேன். பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க மட்டுமே வந்தேன்; இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. சிகிச்சை பெறுவோரின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறினர் என தெரிவித்தார்.