கூட்ட நெரிசலில் சிக்கி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி
சென்னை: "விஜய் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோருக்கும் கட்டணமில்லா சிகிச்சை அளிக்கப்படுகிறது. 31 பேர் உயிரிழந்துள்ளனர். 58 பேர் சிகிச்சையில் உள்ளனர்" என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.