Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிவகாசியில் ரூ.400 கோடிக்கு காலண்டர் விற்பனை: அச்சக உரிமையாளர்கள் மகிழ்ச்சி

சிவகாசி: சிவகாசியில் ரூ.400 கோடிக்கு காலண்டர் விற்பனை நடந்துள்ளது. ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கும் போதும், வீடுகள், அலுவலகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் முதன்மையாக இருப்பது தினசரி காலண்டர்கள் மற்றும் மாத காலண்டர்கள் தான். சிவகாசியில் புத்தாண்டிற்காக காலண்டர்கள் தயாரிக்கும் பணிகள் கடந்த 4 மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. பிரத்யேகமாக, தினசரி மற்றும் மாத காலண்டர்கள் தயாரிப்பு பணிகளில் மட்டும் சுமார் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சுமார் 90 சதவீத ஆர்டர்களுக்கு காலண்டர்கள் அனுப்பும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள ஆர்டர்களை, இன்னும் ஒரு சில நாட்களில் அனுப்பும் பணிகளில் காலண்டர் தயாரிப்பு நிறுவனங்கள் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றன. இந்த ஆண்டு காலண்டர்கள் விற்பனை சுமார் ரூ.400 கோடி அளவிற்கு இருந்ததாக காலண்டர் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். விறுவிறுப்பான காலண்டர்கள் விற்பனையால் சிவகாசி பகுதியில் உள்ள காலண்டர் தயாரிப்பாளர்கள், அச்சக உரிமையாளர்கள், இவற்றில் பணிபுரியும் தொழிலாளர்கள் உட்பட அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் பெரும் மழையால் பாதித்தது. இதனால் சிவகாசியில் ரூ.10 கோடி மதிப்பிலான காலண்டர் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டன. ஆர்டர் கொடுத்த பலர் காலண்டர்களை வாங்காமல் இருந்தனர்.

தற்போது தமிழக அரசின் நடவடிக்கையால் 8 மாவட்டங்களிலும் இயல்பு வாழ்க்கை திரும்பி வரும் நிலையில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட காலண்டர்கள் ஆர்டர்கள் தற்போது அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால் அரசியல் கட்சியினர் பலர் தற்போது புதிய ஆர்டர்கள் கொடுத்து வருகிறார்கள். தற்போது பெறப்பட்டு வரும் ஆர்டருக்கு உரிய காலண்டர்கள் வருகிற தை பொங்கலுக்குள் சப்ளை செய்ய சிவகாசி அச்சகங்கள் முடிவு செய்து அதற்கான பணிகளை இரவு, பகலாக செய்து வருகிறது.