தலைமை நீதிபதி மீது காலணி வீச்சு விவகாரம் - கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுப்பு
டெல்லி : காலணி வீசிய ராகேஷ் கிஷோரை மன்னித்து விடுவிக்க தலைமை நீதிபதியே கூறிவிட்டார். எனவே, இவ்விவகாரத்தில் மேல் நடவடிக்கை தேவையில்லை என்றே கருதுகிறோம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீசிய வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனு மீது அடுத்த தலைமை நீதிபதியான சூர்யகாந்த் அமர்வு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.
