திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த 17 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த அதே பகுதியை சேர்ந்த ஜெயகாளீஸ்வரன் (19), மதன்குமார் (21), பரணிகுமார் (21), பிரகாஷ் (24), நந்தகோபால் (19), பவா பாரதி (22) மற்றும் 14, 15, 16 வயதுடைய சிறுவர்கள் என மொத்தம் 9 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
சிறுமியை உடுமலையில் உள்ள தனியார் விடுதியில் வைத்து பலாத்காரம் செய்ததும், இதற்கு சாமுவேல் உதவியாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, உடுமலையில் உள்ள தனியார் விடுதி மேலாளரான சாமுவேல் (60) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.