Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாட்னா மருத்துவமனையில் பரோல் கைதி சுட்டு கொலை: எஸ்ஐ உள்பட 5 போலீசார் சஸ்பெண்ட்

பாட்னா: பாட்னா மருத்துவமனையில் கைதி சுட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் காவல்துறையினர் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தை சேர்ந்த கொலை குற்றவாளி சந்தன் மிஸ்ரா.பரோலில் வந்த அவர் பாட்னாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கடந்த 17ம் தேதி காலை அந்த தனியார் மருத்துவமனைக்குள் புகுந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், சந்தன் மிஸ்ரா அனுமதிக்கப்பட்டிருந்த வார்டுக்குள் நுழைந்து மிஸ்ராவை கண்மூடித்தனமாக சுட்டனர்.

இதில் சந்தன் மிஸ்ரா உயிரிழந்தார். சந்தன் மிஸ்ரா கொலை சம்பவம் தொடர்பாக பணியில் அலட்சியமாக இருந்த காவல்துறையினர் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து பாட்னா காவல் கண்காணிப்பாளர் தீஷா பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “சந்தன் மிஸ்ரா கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கடமை தவறியதற்காக ஒரு சப் இன்ஸ்பெக்டர், 2 ஏஎஸ்ஐக்கள் மற்றும் 2 கான்ஸ்டபிள்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.