Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாணவிக்கு முத்தம் கொடுப்பதுபோல் போட்டோ பரவல் தலைமை ஆசிரியருக்கு கும்மாங்குத்து ஜட்டியுடன் இழுத்து சென்ற உறவினர்கள்

விருத்தாசலம்: மாணவிக்கு முத்து கொடுப்பதுபோல் போட்டோ வைரலானதால் தலைமை ஆசிரியரை சரமாரியாக தாக்கி உறவினர்கள் ஜட்டியுடன் இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே எருமனூர் சாலையில் தனியார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக கடலூரை சேர்ந்த எடில் பெர்ட் பெலிக்ஸ் (45) உள்ளார். இவர் கடந்த ஆண்டு பயின்ற மாணவி ஒருவருடன் முத்தம் கொடுப்பது போல் போட்டோ ஒன்றை தனது செல்போனில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அந்த போட்டோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.

இதை பார்த்த அந்த மாணவியின் உறவினர்கள் மற்றும் கிராம இளைஞர்கள் ஆத்திரமடைந்து நேற்று மாலை பள்ளிக்கு சென்றுள்ளனர். அங்கு தலைமை ஆசிரியரை சரமாரியாக தாக்கி ஆடைகளை கிழித்து ஜட்டியுடன் வெளியே இழுத்து வந்தனர். பள்ளி வளாகத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரம்வரை அவரை தாக்கியபடி சென்றுள்ளனர். தகவலறிந்து விருத்தாசலம் போலீசார், தலைமை ஆசிரியரை மீட்டு பள்ளி வளாகத்திற்குள் கொண்டு சென்றனர். தொடர்ந்து விசாரணை செய்து கொண்டிருந்தபோது, மாணவியின் பெற்றோர், உறவினர்கள் திரண்டு விருத்தாசலம் -எருமனூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவியிடம் தவறான செயலில் ஈடுபட்ட தலைமையாசிரியரை கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதை தொடர்ந்து தாசில்தார் உதயகுமார், விருத்தாசலம் டிஎஸ்பி ஆரோக்கியராஜ், நெய்வேலி டிஎஸ்பி சபியுல்லா ஆகியோர் அவர்களிடம் சமாதானம் பேசி இன்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடத்தி முடிவெடுப்பதாக தெரிவித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். தொடர்ந்து தலைமை ஆசிரியர் எடில் பெர்ட் பெலிக்ைஸ மீட்டு விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.