திருவனந்தபுரம்: குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்தவர் ரதீஷ் (25). கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள நாதாபுரம் பகுதியில் கூலித் தொழில் செய்து வந்தார். அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த 11 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி தனது வீட்டுக்கு வரவழைத்து பல மாதங்களாக பலாத்காரம் செய்துள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ரதீஷுக்கு 58 வருடம் கடுங்காவல் தண்டனை விதித்து நாதாபுரம் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
Advertisement